அஸ்ஸலாமு அலைக்கும் **

Saturday, June 22, 2013

எங்கள் லால்பேட்டை ஜாமியா மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரியின் 150-வதுஆண்டு விழா

எங்கள் லால்பேட்டை ஜாமியா மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரியின்
150-வதுஆண்டு விழா...........!!

கடலூர் மாவட்டத்தில் 240 ஆண்டுக்கு முன் முஸ்லிம்
மன்னர்உருவாக்கியசமத்துவ புரத்தை காணஓர் அரிய வாய்ப்பு….!!!


சரித்திரத்தில் சாதனை செய்த சன்மார்கத் தொண்டர்கள் தோன்றிய
லால்பேட்டையைஇங்கே அறிமுகம் செய்கிறோம். அல்லாஹ்வின் நாமம் கூறி
அல்ஹம்தின் புகழும்கூறி அழைக்கிறோம் வாருங்கள் படித்தறிவோம்.

முதஅவ்விதன்! முபஸ்மிலன்!! முஹம்திலன் !! முஸல்லியன்!!!
வமுஸல்லிமா!!ரப்பனா ஆத்தினா ஸஆதத் தாரைன்.

அன்புடையீர்! அஸ்ஸலாமுஅழைக்கும் (வரஹ்) இப்பகுதியில் சுமார் 150
ஆண்டுகள்பழமை வாய்ந்த வரலாற்று புகழ் பெற்ற, மார்க்க அறிஞர்களை
உருவாக்கிஅனுப்பும் ஓர் மதரஸாவைபற்றி இங்கு அறிமுகப்படுத்துகின்றோம் .

அல்ஹம்துலில்லாஹ்...!

தமிழகத்தில் பழைமை வாய்ந்த அரபுகல்லூரிகளில் லால்பேட்டை ஜாமிஆ
மன்பவுல்அன்வாரும் ஒன்றுஊர்மக்களால் நடத்தப்பட்டு ஒவ்வொரு மாணவரையும்
தன்பிள்ளைகளாக ஏற்று தினம் [7ஆண்டுகள் ]உணவளித்து
மார்க்ககல்விபயிலச்செய்துபட்டம் பெற்று ஆலிம்களாக உலகமுழுவதும் பணியாற்றி
மார்க்க சேவை செய்துவருகின்றார்கள் இதன் சிறப்பை எழுதிமாலாது....

சரித்திரம் படைத்து,சன்மார்க்க கோட்டை என பெயரெடுத்து,
ஊரின்விருந்தோம்பலை உலகுக்கு உணர்த்திய ஜாமிஆ மன்பவுல் அன்வார்.தரணி
எங்கும்பரவி மார்க்கப் பணியாற்றும் மகத்துவம் மிக்க ஆலிம் பெருமக்களை
உருவாகித்தருகின்ற மாபெரும் கல்வி நிறுவனத்தின் 150-வது ஆண்டு விழா இதோ
நம்மை எதிநோக்கி வருகின்றது…

பிடி அரிசியும்,வெற்றிலை மகிமை பணமும் நமதூர் ஜாமிஆவின் புகழ் மனம்
பரவவித்திட்டதை எக்காலத்திலும் எவராலும் மறந்து
விடமுடியாது.பொருளாதாரத்தின் உச்சியில் இல்லாதிருந்த காலத்திலேயே
மண்ணின்மைந்தர்கள் மனம் கமழும் மதரஸாவை, தங்களை அர்ப்பணித்து
வளர்த்தபெருந்தகைகள் தான் நமது
குடும்பத்தின்முன்னோர்களும்,மூதாதையர்களும்!இப்பெரும் பணியில் நம் மக்கள்
தங்களைஈடுபடுத்திக் கொண்டதன் விளைவுதான் அல்லாஹ்வின் அருள்
நிறைந்துநிம்மதியோடு வாரிசுகள் வளமுடன் வாழ்ந்து
வருவதைபறைசாற்றுகிறது.அல்ஹம்துலில்லாஹ்!

கல்லாக் கல்வியும் காலத்திற்க்கேற்ப புதிய உருவாக்கத்தில்
வந்தாலும்,மார்க்கம் என்பது உலகம் அழியும் வரை ஒன்று தானே? அப்படியானால்
அந்தமார்க்கத்தை அறிந்து கொள்ளும்கல்வியும் ஒன்றாகத் தானே இருக்க
முடியும்?

என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையோடு நெஞ்சுயர்த்தி
நிற்கும்மதரஸாக்களுக்கு முன் வடிவம் தந்து எல்லா நிலையிலும்
முன்மாதிரியாகத்திகழும் நமது ஜாமிஆமன்பவுல் அன்வாரின் மகிமையை இந்த
வளர்ந்து விட்டவிஞ்ஞான உலகிற்கு நினைவூட்ட நமக்கு கிடைத்திருக்கும்
இந்தநல்லசந்தர்ப்பத்தை பயன் படுத்த ஜாமிஆவின் 150-வது ஆண்டு விழாவை
பயன்படுத்ததக்க தருணம்.

மத நல்லிணக்கத்தின்மறு பெயருக்கு உதாரணமாய் விளங்கி வரும் இந்தலால்பேட்டை
1775 ம் ஆண்டுக்கு முன்பு லால்கான் உருவாக்கியசமத்துவபுரம்.அப்போது இங்கு
சொற்ப குடும்பங்களேஇருந்தன இன்று மாட மாளிகைஎன ஆயிரக்கணக்கான வீடுகள்
பிரம்மாண்டமாய் 12 அழகிய இறை இல்லம்,உலகத்திற்கு உலமாக்களை வாரி வழங்கும்
ஜாமிஆமன்வபுல் அன்வார்அரபுக்கல்லூரி. இக்கல்லூரிக்கு வயது 150 இதன் விழா
வரும் ஜூன் 22.23.ஆகிய தேதிகளில் நிகழவிருக்கிறது.சமுதாயத் தலைவர்கள்
மட்டுமின்றி சமயத்தலைவர்கள் அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ளும் சமய
நல்லிணக்கவிழா.இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் வருகைதரும்
சன்மார்க்க அரிஞர்கள்கலந்துகொள்ளும் பட்டமளிப்பு விழா, ஜாமிஆவின் 150
ஆண்டு வறலாற்று பொக்கிஷமலர் வெளியீட்டு விழா, நினைவு சின்னங்களின்
அற்பணிப்பு விழாஎன்றுலால்பேட்டை விழா கோலம் காணப் போகும் அரிய வய்ப்பை
காண இன்னும் சிலமாதங்களே உள்ளன இவ்விழாவை காணவாருங்கள் வாருங்கள்
வாருங்கள்….!

150ஆண்டு கள் பழமை வாய்ந்த புகழ் பெற்ற மதரஸா ஜாமிஆ
மன்பவுல்அன்வார்மேலும் கியாம நாள் பல நூற்றாண்டுகளுக்கு
ஆலிம்களையும்,ஹாபிழ்களையும்,மார்க்க அறிஞர்களையும் உருவாக்கிடவும், அதன்
புகழ்என்றென்றும் குறையாமல்இன்னும் பல புகழ்களைப் பெற முஸ்லிமாகிய
நாம்அனைவரும் வல்ல அல்லாஹ்விடம்துஆச் செய்யுமாறு உங்களை அன்புடன்
கேட்டுக்கொள்கிறோம்....

லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வர் பட்டமளிப்பு விழாவிற்க்கு
வருகைதரும்அனைவரையும் வருக வருக என அழைக்கிறோம்...

பட்டம் பெறும் மௌலவிகளின் தீன் பணி தொடர்ந்திடவாழ்த்துகிறோம்....

வஸ்ஸலாம்...

No comments:

Post a Comment

Photobucket