காட்டுமன்னார்கோவில், : காட்டுமன்னார்கோவிலில் மனநிலை பாதிக்கப்பட்டவர் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின் றனர். பல இடங்களில் அழுக்கு உடையுடன் சுற்றித்திரிந்து வருகின்றனர். சிலர் காலையிலிருந்து இரவு வரை வேகமாக கத்திகொண்டு சுற்றி வருகின்றனர். பொது மக்களின் மீது கற்களை வீசி தொந்தரவு செய்து வருகின்றனர்.
கத்தரி வெயில் வீசும் நிலையில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் வெப்பம் தாங்க முடியாமல் கடை களின் முன்பு மயக்க மடைந்து சுருண்டு விழுகின்றனர். சிலர் தார் சாலை யிலேயே மயங்கி விழுகின்றனர். சமுக நலத்துறை சார்பில் இந்த பகுதியில் சுற்றி திரியும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களை பிடித்து காப்பகங்களில் சேர்ந்து பராமரிக்க வேண்டும் என்று சமூக நல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment