skip to main |
skip to sidebar
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் !!
தமிழகம் மற்றும் புதுசேரியில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 10.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதிய இத்தேர்வில் 89% சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
500 க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 9 பேர் முதலிடமும் 500 க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 52 பேர் இரண்டாம் இடமும் 500 க்கு 496 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 136 பேர் மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்.
கணிதப்பாடத்தில் 29,905 பேர் 100 /100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
அறிவியலில் 38,154 பேர் சதம் அடித்து சாதனை படைத்துள்ளனர்.
97.29 % சதவிகிதம் தேர்ச்சி பெற்று கன்னியாகுமரி மாவட்டம் மாவட்டங்களில் முதலிடம் பிடித்துள்ளது .
வருகின்ற ஜூன் 20ம் தேதி மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்கப் படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.இன்று வெளியான தேர்வு முடிவில் தோல்வி அடைந்த மாணவர்கள் ஜூன் மற்றும் ஜூலையில் நடைபெறவிருக்கும் உடனடி தேர்வில் பங்கேற்கலாம். அதற்க்கான விண்ணப்பபடிவத்தை www.dge.tn.nic.in இந்த இணையதள மூலமாக விண்ணப்பிக்கலாம்.
ஜூன் 3 ம் தேதி முதல் 5 ம் தேதிக்குள் உடனடி தேர்வுக்கு பதிவு செய்யவேண்டும். தேர்வு கட்டணத்தை SBI வங்கியின் எதாவது ஒரு கிளையில் 6ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று தேர்வுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
No comments:
Post a Comment