அஸ்ஸலாமு அலைக்கும் **

Friday, April 26, 2013

அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யபட்டதை கண்டித்து மேலப்பாளையத்தை ஸ்தம்பிக்க வைத்த எஸ்.டி.பி.ஐ போராட்டம்

பெங்களூர் பாரதிய ஜனதா அலுவலகம் அருகே நடந்த குண்டு வெடிப்புக்களில் உண்மை குற்றவாளிகளை பிடிக்காமல் தொடர்ந்து அப்பாவி முஸ்லிம்களை கைது செய்யும் காவல்துறையை கண்டித்தும்,மேலும் உண்மை குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ
சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை மேலப்பாளையம் சந்தை பகுதியில் வைத்து நடைபெற்றது

பெங்களூர் குண்டுவெடிப்பு தொடர்பாக நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த கிச்சான் புகாரி உள்பட தமிழகம் முழுவதும் எந்த தவறும் செய்யாத அப்பாவி முஸ்லிம்கள் பலர் தமிழக போலீசாரின் உதவியுடன் கைது செய்யப்பட்டு இவர்கள் பெங்களூர் அழைத்து செல்லப்பட்டனர். முன்னதாக கைது செய்யப்பட்ட புகாரி மீது கோவை குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதியப்பட்டன. ஆனால் இந்த வழக்குகள் அனைத்திலிருந்தும் புகாரி நிரபராதி என நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்,இப்பொழுது சமுக சேவை செய்து வருகிறார்.

இந்நிலையில் எந்த ஆதாரமும் இல்லாமல் பெங்களூர் குண்டுவெடிப்பு தொடர்பாக தொடர்ந்து  முஸ்லிம்  இளைஞர்களை  கைது செய்யப்பட்டிருப்பது முஸ்லிம்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குமரி பாஜக தலைவர் தாக்கப்பட்ட சம்பவத்திலும் உண்மை குற்றவாளிகளை பிடிக்காமல் பொய்யாக பல முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.போலீசாரின் இத்தகைய செயலை கண்டித்து நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில்,சந்தை முக்கு பகுதியில் வைத்து எஸ்.டி.பி.ஐ சார்பாக மேலப்பாளையத்தை ஸ்தம்பிக்கும் அளவிற்கும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம்   நடைபெற்றது .

இந்த ஆர்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ மாவட்ட தலைவர்  பிஸ்மி காஜா தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர்கள் முன்னிலை வகித்தனர்.இந்த ஆர்பாட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக ஜமாத்துல் உலமா சபை மாவட்ட தலைவர் T.J .M  சலாஹுதீன் ரியாஜி,முஸ்லீம் லீக்  மாவட்ட செயலாளர் எல்.கே.எஸ்.மீரான் முகைதீன்,மதிமுக அரசியல் மையக்குழு உறுப்பினர் கே.எம்.ஏ.நிஜாம்,பாப்புலர் ஃப்ரண்ட்  மாநில செயற்குழு உறுப்பினர் முகைதீன் அப்துல் காதர்,ஐ.என்.டி.ஜே மாநிலச்செயலாளர் அப்துல் காதர் மன்பய,ம.ம.மு.க  மாநிலத்தலைவர் பாளை.எஸ்.ரஃபீக்,எஸ்.டி.பி.ஐ  மாநிலத்தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி.விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் துரை அரசு,மனித உரிமை ஆர்வலர் வழக்கறிஞர்.ஜான் பிரிட்டோ,எஸ்.டி.பி.ஐ மாநில பொதுச்செயலாளர் நெல்லை முபாரக் மேலும் பலர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.இறுதியாக எஸ்.டி.பி.ஐ மாநில செயற்குழு உறுப்பினர் ஐ.உஸ்மான் கான் நன்றி கூறினார்

இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி நெல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த 3000 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

Photobucket