எஸ்.டி.பி.ஐ (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா )கட்சியின் தமிழ்மாநில பொதுக்குழு நாளை திருச்சியில் நடைபெறுகிறது.
நாளை மார்ச் 9 ஆம் தேதி எஸ்.டி.பி.ஐ
கட்சியின் மாநில பொதுக்குழு திருச்சியில் கூடுகிறது.திருச்சியில்
எல்.கே.எஸ் மஹாலில் நடைபெறும் இப்பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர்
கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி தலைமையில் துவங்குகிறது.
இதில் கடந்த 2 ஆண்டுகளில் கட்சியின்
வளர்ச்சி பற்றிய ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும்.அதனை தொடர்ந்து அடுத்த 2
ஆண்டுக்கான மாநில நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்
நடைபெறும்.தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியின்
தேசிய செயற்குழு உறுப்பினரும், கேரளா மாநில தலைவருமான வழக்கறிஞர் அஷ்ரஃப்
இத்தேர்தலை நடத்துவார்.
இரண்டாம் நாள் (10.03.2013) புதிய
நிர்வாகிகள் அறிமுகமும்,அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள
நிர்வாகிகளுக்கு சமகால இந்திய அரசியல் பற்றிய நிகழ்ச்சிகள்
நடத்தப்படும்.இந்நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய தலைவர்
இ.அபூபக்கர் கலந்து கொள்கிறார்.
10 ஆம் தேதி 3 மணிக்கு பத்திரிக்கையாளர்
சந்திப்பு நடைபெறும்.புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில நிர்வாகிகள் இதில்
பங்கு கொள்வர்.அப்போது மிக முக்கியமான தீர்மானங்கள் வெளியிடப்படும்
அன்று மாலை திருச்சி மாவட்ட அரசியல்
எழுச்சி மாநாடு திருச்சி உழவர் சந்தையில் மாவட்ட தலைவர் முபாரக் அலி
தலைமையில் நடைபெறும்.பேரணியுடன் தொடங்கும் இம்மாநாட்டில் மாநில
நிர்வாகிகளும்,தேசிய தலைவர் அபூபக்கர்,மற்றும் பல்வேறு அரசியல் கட்சியின்
தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.
No comments:
Post a Comment