SDPI கட்சியின் மாநில தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்…
இன்று(22.03.2013) தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதி நிலை அறிக்கையில் மக்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்பட வில்லை.
விலைஉயர்வை கட்டுபடுத்தும்
திட்டங்கள்,வேலை வாய்ப்பை அதிகப்படுத்துவதற்கான திட்டங்கள், மின்வெட்டை
நீக்குவதற்கான திட்டங்கள் நிதி
நிலை அறிக்கையில் இல்லை. சூரிய ஒழி மின்
திட்டம் பற்றி பெரிய அளவில் அறிவித்திருந்தும் அதற்கு போதுமான நிதி
ஒதுக்கீடு செய்யவில்லை.
காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கான
நிவாரண தொகையை உயர்த்திடும் அறிவிப்பும், விவசாய தொழிலாளருக்கான நிவாரண
அறிவிப்பும் இடம் பெறவில்லை .நெல் மற்றும் கரும்பு கொள்முதல் விலை உயர்வு
பற்றிய அறிவிப்பும் இல்லாதது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கும்.
பொருளாதார வளர்ச்சி விகிதம் 4.61 என்பது கவலைக்குரியது . இதை உயர்த்துவதற்கான பொருளாதார திட்டங்கள் பட்ஜெட்டில் இல்லை.
மதுவிலக்கு கோரிக்கை பரவலாக இருக்கும்
நிலையில் மது விற்பனை நம்பியே இலவச திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு
செய்திருப்பது ஏமாற்றதிர்க்குரியது.
சிறுபான்மை மக்களின் வாழ்க்கை தரத்தை
உயர்த்தவும் ,அவர்களை முன்னேற்ற பாதையில் இட்டு செல்லும் எந்த அறிவிப்பும்
இல்லாதது ஏமாற்றதிர்க்குரியது என்றாலும் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு
செய்திருப்பதும், கூட்டுறவு அங்காடி மூலம் 1 கிலோ அரிசி ரூ.20 க்கு விற்பனை
செய்யும்அறிவிப்பும் ,தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அறிவிப்பும்,
தென் மாவட்டங்களுக்கு முதலீட்டை அதிகரிக்க திட்டம் அறிவிக்கப்படும்
என்பதும்,வரிகள் ஏதும் விதிக்கப்படாததும் வரவேற்கப்பட வேண்டியவை.
கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட
திட்டங்கள் எந்த அளவிற்கு செயல்படுத்தப்பட்டுள்ளன, சிறுபான்மையினர்,
தலித்துகள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதிகள்
முழுமையாக செலவளிகப்படுகிறதா என்பது பற்றியும் முழுமையான வெள்ளை அறிக்கை
வெளியிட வேண்டும் .அப்படி வெளியிட்டால்தான் பட்ஜெட் என்பது வெறும்
அறிவிக்கப்படும் வெற்று திட்டங்களா அல்லது அவை நிறைவேற்றப்படுகின்றனவா
என்பதை மக்கள் அறிய முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment