அஸ்ஸலாமு அலைக்கும் **

Thursday, December 6, 2012

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை எதிர்த்து எஸ்.டி.பி.ஐ நடத்திய தர்ணா

புதுடெல்லி:சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் தீர்மானத்தை பாராளுமன்றம் நிராகரிக்க வேண்டும் என்று கோரி சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா தர்ணா போராட்டத்தை நடத்தியது. தேசிய பொதுச் செயலாளர் ஹாஃபிஸ் மன்சூர் அலிகான் போராட்டத்தை துவக்கி வைத்தார்.


சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதால் நாட்டில் 30 சதவீத சில்லறை வியாபாரிகள் நடுவழியில் நிறுத்தப்படுவார்கள் என்று ஹாஃபிஸ் மன்சூர் அலிகான் தனது உரையில் குறிப்பிட்டார். நாட்டில் சாதாரண மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் தீர்மானத்தை அரசு வாபஸ் பெறவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை எதிர்க்கும் வாசகங்கள் அடங்கிய அட்டைகளுடன் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் தர்ணா போராட்டத்தில் கலந்துகொண்டனர். டெல்லி மாநில தலைவர் வழக்கறிஞர் அஸ்லம், பொதுச் செயலாளர் முஹம்மது ஜாபிர், தேசிய செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் பி.கோயா ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

No comments:

Post a Comment

Photobucket