முஷாராபாத்: முஸ்லீம் பெண்கள் ஹோட்டல்கள், அலுவலகங்களில் வரவேற்பாளர்
வேலை பார்க்கக் கூடாது என்று இஸ்லாமிய அமைப்பான தாரூல் உலூம் தியோபாந்த்
தடை விதித்து பத்வா வெளியிட்டுள்ளது.
இது இஸ்லாமிய நெறிமுறைகளுக்குப் புறம்பானது என்றும் ஷரியா
சட்டத்திற்கு விரோதமானது என்றும் அது கூறியுள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு நிறுவனம், முஸ்லீம் பெண்களை வரவேற்பாளர் பணியில் அமர்த்துவது தொடர்பாக இந்த அமைப்பிடம் ஆலோசனை கேட்டிருந்தது. இதற்குப் பதிலளித்து பிறப்பித்த உத்தரவில்தான் இப்படிக் கூறியுள்ளது தியோபந்த்.
இதுகுறித்து
தாரூல் உலூம் தியோபாந்த் கூறுகையில், அறிமுகம் இல்லாத ஆண்களிடம் முஸ்லீம்
பெண்கள் தங்களது முகத்தைக் காட்டுவதை இஸ்லாமிய மத நெறிகள் அனுமதிக்கவில்லை.
எனவே வரவேற்பாளர் பணியில் முஸ்லீ்ம் பெண்கள் பணியாற்ற முடியாது என்று
கூறியுள்ளது.
இது இஸ்லாமிய நெறிமுறைகளுக்குப் புறம்பானது என்றும் ஷரியா
சட்டத்திற்கு விரோதமானது என்றும் அது கூறியுள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு நிறுவனம், முஸ்லீம் பெண்களை வரவேற்பாளர் பணியில் அமர்த்துவது தொடர்பாக இந்த அமைப்பிடம் ஆலோசனை கேட்டிருந்தது. இதற்குப் பதிலளித்து பிறப்பித்த உத்தரவில்தான் இப்படிக் கூறியுள்ளது தியோபந்த்.
இந்த தடையை ஆதரித்துக் கருத்து தெரிவித்துள்ள உ.பி.
இமாம் கழகத்தின் தலைவரான முப்தி ஜுல்பிகர் அலி கூறுகையில், இந்த தடை
சரியானதுதான். அதேசமயம், பர்தா அணிந்து கொண்டு முஸ்லீம் பெண்கள் பணியாற்றத்
தடை இல்லை. ஆனால் வரவேற்பாளர் பணியில் இது சாத்தியமில்லை என்பதால்
வரவேற்பாளர் பணியில் முஸ்லீம் பெண்களை நியமிக்கக் கூடாது என்றார்.
No comments:
Post a Comment