அஸ்ஸலாமு அலைக்கும் **

Tuesday, December 25, 2012

வீராணம் ஏரியில் தண்ணீர் திறக்க கோரி மறியல் செய்த விவசாயிகள் மீது போலீஸ் தடியடி

வீராணம் ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது. எனவே கடந்த மாதம் 24-ந்தேதி முதல் தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது. இதனால் காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, பரங்கிப்பேட்டை, சிதம்பரம், குமராட்சி உள்ளிட்ட கடைமடை பகுதியில் சம்பா பயிர்கள் நீர் வசதியின்றி வாடத்தொடங்கின.


அதையடுத்து   லால்பேட்டை பொதுப் பணித்துறை அலுவலகம் முன்பு இன்று விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்துக்கு விவசாய சங்க தலைவர் விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் இளங்கீரன், பிரகாஷ், பார்த்தீபன் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். சாலை மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.
உடனே அந்த பகுதிக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகசாமி,

காட்டுமன்னார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார், தாசில்தார் தில்லைகோவிந்தன், பொதுப்பணித்துறை அதிகாரி வளர்மதி ஆகியோர் விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் விவசாயிகள் சாலை மறியலை கைவிட மறுத்தனர்.

அதையடுத்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
Thanks  lalpetexpress

No comments:

Post a Comment

Photobucket