எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி இன்று வெளியுட்டுள்ள அறிக்கை பின்வருமாறு
மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரிய(CBSE) பாட திட்டத்தின் 9 வது வகுப்பு
‘சமுக அறிவியல்‘ பாடத்தில் ‘இந்தியாவின் காலனியாதிக்க மாற்றம்‘ என்ற பாடம்
உள்ளது. இதில் ‘சாதி மோதலும் ஆடை மாற்றமும்‘ என்ற தலைப்பின் கீழ் நாடார்
சாமுதாயத்தை பற்றி தவறான தகவல்களும் வரலாற்று திரிபுகளும்
வெளியிடப்பட்டுள்ளன. இதை எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக வன்மையாக
கண்டிக்கிறேன் .உடனடியாக இந்த தவறுகளை திருத்துவதோடு இந்த தவறுக்கு
காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.
ஒரு சமுதாயம் சார்ந்த வரலாற்றை ,தகவல்களை பதிவு செய்யும் போது கவனமும்
,பொறுப்புணர்வும் தேவை .திரிபுகளுக்கு இடம் கொடுக்காமல் உண்மை வரலாறு
மக்களுக்கு பொய் சேர வேண்டும்.நாடர்கள் தான் குமரி மாவட்டத்தின் பூர்விக
குடிமக்கள் என்ற வரலாற்று உண்மை இக்கட்டுரையில் மறைக்கப்பட்டு
மலையாளநாயர்கள் தான் குமரி மாவட்டத்தின் பூர்விக குடிமக்கள் என
குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடார்களை சாணார்கள் என குறிப்பிட்டுள்ளதோடு, மனுதர்ம ஆதிக்க சக்திகளின்
ஆதிக்கத்திற்கு எதிராக, நாடார்களின் உரிமைகளை மீட்க போராடிய அய்யா
வைகுண்டரின் போராட்டங்களும் தியாகங்களும் மறைக்கப்பட்டுள்ளன .இது
அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது .மத்திய அரசு இதுகுறித்து
இதுவரை கருத்து தெரிவிக்காதது வருந்த்ததக்கது .
இதனால் நாடுமுழுவதும் உள்ள நாடார் சமுதாய சொந்தங்கள் மட்டுமின்றி சமுக
நீதி உணர்வுள்ள அனைவருமே கொதித்து போயுள்ளனர். இது சம்பந்தமாக மனிதவள
மேம்பாட்டுத்துறை அமைச்சர் பல்லம் ராஜூ அவர்களுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி
சார்பாக கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
மத்திய அரசு தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதை வலியுறுத்தி
நவம்பர் 6 தேதி நாகர்கோவிலில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொது செயலாளர்
நெல்லை முபாரக் தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர் T.ரத்தினம் அண்ணாச்சி
முன்னிலையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்து
கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளா
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளா
No comments:
Post a Comment