மறைந்த
இந்துமதத் தலைவரும் மகாராஷ்டிரா மாநில சிவசேனா கட்சியின் தலைவருமான
பால்தாக்கரேவுக்கு கடந்த 5 வருடங்களாக சிகிச்சை அளித்துவந்தது ஒரு முஸ்லிம்
மருத்துவர் என்பது தெரியவந்துள்ளது. மும்பை லீலாவதி மருத்துவமனையில்
நுரையீரல் நோய் சிகிச்சை
பிரிவில் புகழ் பெற்ற மருத்துவரான முஸ்லிம் மதத்தை
சேர்ந்த டாக்டர் ஜலீல் பார்க்கர்தான் பால்தாக்ரேவுக்கு சிகிச்சை அளித்த
அந்த மருத்துவர்.பால்தாக்கரே ஒவ்வொரு முறையும் நுரையீரல் நோயால் பாதிக்கப்படுகிறபோதும், அவரது குடும்பத்தின் நம்பிக்கைக்குறியவரான டாக்டர் ஜலீல் பார்க்கர்தான் அழைக்கப்பட்டிருக்கிறார். பால்தாக்கரே கடந்த 5 முறையாக நுரையீரல் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டபோதும் அவரை காப்பாற்றியது இந்த முஸ்லிம் மதத்தவரான டாக்டர் ஜலீல் பார்க்கர்தான்.
பால்தாக்கரேவின் இறப்பு செய்தியை கண்ணீர் மல்க அவரது கட்சித் தொண்டர்களிடமும் செய்தியாளர்களிடமும் தெரிவித்தவர் முஸ்லிம் மருத்துவரான அந்த ஜலீல் பார்க்கர்தான். சிவசேனா கட்சியின் வருடாந்திர தூஸ்ரா பேரணியின் போது பால்தாக்கரேவின் உடன் இருக்கும் முக்கிய தலைவர்களில் அவரது குடும்பத்தின் மிக நெருக்கமானவரான இந்த ஜலீல் பார்க்கரும் ஒருவர்.
சிவசேனா கட்சியின் பால்தாக்கரேயின் நம்பிக்கைக்குறிய டாக்டராக இருப்பவர் ஒரு முஸ்லிம் மதத்தவர் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டபோதும், அவரால் மிகவும் நேசிக்கப்பட்ட இந்த ஜலீல் பார்க்கர் குறித்து ஒரு வார்த்தை கூட அவர் பேசியது கிடையாது.
சமீபத்தில் பால்தாக்கரேவின் மகனும் சிவசேனா கட்சியின் செயல் தலைவருமான உத்தவ் தாக்கரே இருதய நோயால் பாதிக்கப்பட்டதுபோதும் டாக்டர் ஜலீல் பார்க்கரின் தலைமையிலான மருத்துவர் குழுதான் அவருக்கும் சிகிச்சை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment