அஸ்ஸலாமு அலைக்கும் **

Sunday, November 11, 2012

அரசு கல்வி நிறுவனங்களின் தரம் உயர்த்தப்பட வேண்டும்!எஸ்.டி.பி.ஐ கட்சி கோரிக்கை

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்… இன்று மௌலான அபுல் கலாம் ஆசாத்தின் நினைவு தினத்தை தேசிய கல்வி தினமாக அரசு கடைபிடித்து வருகின்றது. நமது நாட்டில் இன்று கல்வி என்பது சேவை என்னும் நிலை மாறி தனியார் நிறுவனங்களின் ஆக்கிரமிப்பால் வியாபாரமாக மாறியுள்ளது .அரசு கல்வி நிறுவனங்களிலும் அரசின் போதிய கவனமும், கண்டிப்பும், கட்டமைப்பு வசதிகளும் இல்லாத காரணத்தினால் இன்று புற்றீசல் போல் தனியார் கல்வி நிறுவனங்களை மக்கள் நாடும் நிலை உள்ளது.

இன்னும் ஆயிரக்கணக்கான கிராமங்கள் பள்ளிக்கூடங்கள் இல்லாமலும் மேலும் பள்ளி கூடங்கள் இருக்கும் கிராமங்களில் போதிய வகுப்பு அறை வசதிகள் இல்லாமலும் வகுப்புகள் மரத்தடியின் கீழ் நடக்கும் சூழல் உள்ளது.

மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவிகித ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற சட்டத்தினை தனியார் பள்ளிகளும் பின்பற்ற தயாராக இல்லை. அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளும் தயாராக இல்லை என்ற சூழ்நிலையை இன்று உள்ளது. எனவே கல்வி தினத்தை கொண்டாடும் அரசு கல்வி நிறுவனங்களின் தரம் உயர்த்தப்படுவதற்கும் பணக்கார மாணவர்களுக்கு கிடைக்கும் உயர்கல்வி ஏழை மாணவர்களுக்கும் கிடைக்கின்றது என உறுதி செய்ய மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

Photobucket